Product Name |
Aththachikal Thiru Quran Thakaval Kalanjiyam |
Author | M. Ameer Althaf |
Category | Book |
Publisher | Sajitha Book Centre |
Language | Tamil |
Size | Large |
Binding | Hard bound: art Art Paper |
Number of Cards | 1000+ |
இது ஒரு அறிவுக் கருவூலம்!
————————————–
அத்தாட்சிகள் (Aththachikal) நூல் பற்றிய பேராசிரியர் அ.முஹம்மது கான் பாகவி அவர்களின் மதிப்புரை..
———————————————————-
இப்பெரு நூல்….
அதன் பெயருக்கேற்ப அத்தாட்சிகள் குவிந்திருக்கும் திருக்குர்ஆன்
தகவல் களஞ்சியம் ஆகும். முதல் தொகுதி, பாதுகாப்புப் பலகையான ‘லவ்ஹுல்
மஹ்ஃபூழில்’ இருந்து வந்த அற்புத வேதம் எனத் தொடங்கி, பர்னபாஸ் சுவிசேஷம்
வரை விவாதிக்கிறது.
குர்ஆனே மாபெரும் அற்புதம் எனத் தொடங்கும் இரண்டாம்
தொகுப்பு, இறுதிநாளின் பயங்கரங்கள் வரை விவரிக்கிறது.
மூன்றாம் பாகம் குர்ஆன்
வெளிப்படுத்தும் மறைவான அற்புதங்கள் என ஆரம்பித்து வானில் வட்டமிடும்
பறவைகள் வரை பேசுகிறது.
நான்காம் பாகமோ, விண் அறிவியல் முதல் வான்பிளப்பு
வரையிலான அத்தாட்சிகளை அழகுபட எடுத்தியம்புகிறது.
மொத்தத்தில்,
காலத்திற்கேற்ற ஓர் அற்புதமான அத்தாட்சிகளின் ஆய்வுத் தொகுப்புதான் இந்நூல்.
இல்லை என்று சொல்வதற்கு இதில் ஒன்றும் இல்லை என்பதே இதன் மகிமை
எனலாம். டாக்டர் அமீர் அல்தாஃப் அவர்களின் கடின உழைப்பால் உருவாகியிருக்கும்
இது ஓர் அறிவுக் கருவூலம் என்றால் மிகையாகாது.
Reviews
There are no reviews yet.