Product Information
தவறான வாதங்களும், தெளிவான மறுப்புகளும் – (3 வது புத்தகம் )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்லாஹ்வின் அருளால் கடந்த நான்கு வருடங்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இன்ஷா அல்லாஹ் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி அன்று எனது மூன்றாவது புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
வரலாற்றுப் பக்கங்களில் அசத்தியவாதிகளின் இருட்டடிப்புகள் ஏராளம். அதை இந்த புத்தகம் சிறப்பான முறையில் விளக்கி இருக்கிறது என்ற சீரிய கருத்தை இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷேக் டாக்டர் முபாரக் மதனி ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் நமது புத்தகத்திற்கான அணிந்துரையில் கூறியிருக்கிறார்கள்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன ? அதன் கொள்கைகள் என்ன ?
வஹ்ஹாபிகள் என்று விமர்சிக்கப்படுபவர்கள் யார் ?
பித்ஆ என்றால் என்ன ?
மார்க்க பெயரில் அரங்கேற்றப்படும்
அனாச்சாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருதல்.
பொதுமக்களை குழப்பிக் கொண்டிருக்கும் அசத்தியவாதிகளின் தவறான வாதங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதற்கான மறுப்புகள் தரப்பட்டுள்ளன.
தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் இந்த நூல் அறியாமையை அகற்றி ஸுன்னாவின் முக்கியத்துவத்தை விளக்கி, ஷரீஆவின் நோக்கங்களை பாதுகாக்கும் அரணாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த நூல் இஸ்லாமிய விழிப்புணர்வையும், இறைப் பொருத்தத்தையும் பெறுவதற்கு காரணமாக அமைய வேண்டும் என்று தாங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள் !!
– SM.இஸ்மாயீல் நத்வி
ReviewsThere are no reviews yet.