இன்று பாடநூல்களில் ஜான்சி ராணி, மங்கள் பாண்டே, லோக்மானிய திலக், லாலா லஜ்பதி ராய் குறித்தெல்லாம் படிக்கும் நமது மாணவர்கள் விடுதலை வேள்விக்கான சிந்தனைகளைத் தூண்டிய ஷாஹ் வலீயுல்லாஹ், ஷாஹ் அப்துல் அஸீஸ் முதலியோர் குறித்தோ, துணிச்சலாக வெள்ளைக்காரர்களை எதிர்த்து களத்தில் நின்ற மௌலானா காசிம் நானூத்தவீ, மௌலானா மஹ்மூதுல் ஹசன், மௌலானா உபைதுல்லாஹ் சிந்தி, ஆலி முஸ்லியார் போன்றோர் பற்றி ஒரு வரியைக் கூட படிக்கும் வாய்ப்பைப் பெறுவதில்லை என்பது உண்மையில் வரலாற்றுத் துரோகம். அதை இந்நூல் நேர்செய்கிறது.
***
தம் நாட்டை ஆக்கிரமித்துள்ள அசுர வல்லமை மிகுந்த சக்திகளை எதிர்ப்பதற்காக மதிநுட்பத்துடன் திட்டமிட்டுப் போர் நடத்துவதும், தம் நாட்டிற்காகக் களத்தில் நின்று போராடுவதும்தான் தேசப்பற்று என்றால், எவ்விதச் சந்தேகமுமின்றி இஸ்லாமிய மார்க்க அறிஞர்களே தம் நாட்டிற்கு விசுவாசமான தேசப்பற்றாளர்கள். வாழையடி வாழையாக வரும் தலைமுறையினர் அவர்களை மாபெரும் வீரர்களாக நினவுகூர்வார்கள்.
— ஜெனரல் தாம்சன் ( 1857இல் ஆலிம்கள் தலைமையில் நடத்தப்பட்ட விடுதலைப் போரில் ஆங்கிலேயப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் )
Reviews
There are no reviews yet.