Sale!
, , , ,

அல்அகீதா அத்தஹாவியா – கொள்கை விளக்கம்

38

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உடைய உண்மையான கொள்கைகளையும் அடிப்படைகளையும் கற்க விரும்புகின்ற மக்களுக்கு இந்நூல் மிக முக்கியமான ஒன்றாகும்.

Book Name Ahlussunnah va Jamah kolkai Vilakkam
Author Imam Abu Ja’far At-Tahawi(Rah)
Translator Mufti Umar Shareef Qasimi
Publisher Darul Huda
Language Tamil
Edition 2nd
Binding Soft
Number of Pages 56 Pages

நூல் அறிமுகம்:

இமாம் அபூ ஜஅஃபர் தஹாவி(رحمه الله) அவர்கள் கொள்கை சம்பந்தமாக தொகுத்த இந்த சிறு நூலை நாங்கள் வெளியிடுவதற்கு அல்லாஹ் அருள்புரிந்தான்.

உண்மையான கொள்கைகளின் சுருக்கம் மிகத் தெளிவான வாசகங்கள் மூலமாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உடைய உண்மையான கொள்கைகளையும் அடிப்படைகளையும் கற்க விரும்புகின்ற மக்களுக்கு இந்நூல் மிக முக்கியமான ஒன்றாகும். தாங்களும் இதை படித்து பயன்பெறுவதோடு எல்லா மக்களுக்கும் இந்நூலை அறிமுகப்படுத்தி நன்மைகளை பெறுமாறு அன்போடு கோருகிறோம்.

அல்லாஹ்வே! எங்களிடமிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! மேலும், இஸ்லாமிய கல்வி நூல்களை அதிகம் வெளியிடுவதற்கு உதவுவாயாக! அல்லாஹ்வே! நீதான் நன்கு செவியுறுபவன், பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவன். – Darul Huda

_______________________________________________________________

நூல் ஆசிரியர் அறிமுகம்:

இவர்களை இமாம் அபூ ஜஅஃபர் அத்தஹாவீ என்று அழைக்கப்படும். இவர்களின் தாய் தந்தை மற்றும் தாய் மாமனான இஸ்மாயில் இப்னு யஹ்யா முஸ்னீ ஆகியோர் பெரும் அறிஞர்களாக விளங்கினார்கள்.

இமாம் அவர்கள் ஹதீஸ் கலை வல்லுநராகவும் ஃபிக்ஹு கலை அறிஞராகவும் ஹதீஸ்களை அறிவிப்பதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பத் தகுந்த அறிவிப்பாளராகவும் விளங்கினார்கள். அனைத்துத் தரப்பு அறிஞர்களும் இமாமைக் கண்ணியப்படுத்தினார்கள்.

ஆபூ ஹனீஃபாவின் (ரஹ்) ஆய்வுகளை அதிகம், அறிந்தவராகவும் ஏனைய அறிஞர்களின் ஆய்வுகளை கற்றுத் தேர்ந்தவராகவும் ஃபிக்ஹு, ஹதீஸ் அல்லாத மற்ற கல்விகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இமாம் தஹாவீ விளங்கினார்கள்.

இமாம் அவர்கள் ஏறத்தாழ நாற்பது நூல்கள் எழுதியுள்ளார்கள். அவற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவை.

1.சுனன் அஷ்ஷாஃபியீ
2 ஷர்ஹ் மஆனீ அல்ஆஸார்
3 ஷர்ஹ் முஷ்கில் அல்ஆஸார்

நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது சந்தியத்தைப் பகிரங்கப்படுத்துவது, துணிந்து சந்தியத்தை ஏற்றுக் கொள்வது இது விஷயத்தில் தம் ஆசிரியர்களையோ ஆட்சியாளர்களையோ, சமகாலத்து அறிஞர்களையோ பொருட்படுத்தாமல் இருப்பது ஆகியவை இமாம் அவர்களின் சிறப்புப் பண்பாகும்.

இமாம் அவர்களின் இந்நூலை கல்விமான்கள் அங்கீகரித்துள்ளனர்.

அல்லாஹ் இமாம் தஹாவீ (ரஹ்) அவர்களுக்கு அருபுைரியானாக! அவர்களின் இருப்பிடத்தை சொர்க்கத்தில் ஆக்குவானாக! அவர்களையும் நம்மையும் நல்லோரில் சோப்பானாக! ஆமீன்!!

வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அல்அகீதா அத்தஹாவியா – கொள்கை விளக்கம்”

Your email address will not be published.

Shopping Cart