Sale!
, ,

அர்ரஹீக் அல்மக்தூம் – நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

(1 customer review)

333

ArRaheeq Al-Makhtum (The Sealed Nectar) in Tamil. A complete authoritative book on the life of Prophet Muhammad H by Sheikh Safi-ur-Rahman al-Mubarkpuri,And tamil translate by Mufti Omer Shariff It was honored by the World Muslim League as first prize winner book. Whoever wants to know the whole life style of the Prophet in detail must read this book.

Arraheeq Al MAkhdum

Book Name ArRaheeq Al MAkhdum
Author Shaykh Safi-ur-rahman Mubarakpuri
Translator Mufti Umar Shareef Qasimi
Publisher Darul Huda
Language Tamil
Edition 1
Binding Hardbound
Number of Pages 615 Pages
நூல் அறிமுகம்:

மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி யாதெனில்: ஹிஜ்ரி 1396, ரபிஉல் அவ்வல் மாதம் பாகிஸ்தானில் “ஸீரத்துன் நபி” (நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) குறித்து ஒரு மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களின் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி’ என்ற அமைப்பு அம்மாநாட்டில் ஓர் அகில உலக போட்டியை அறிவித்தது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக அழகிய ஓர் ஆய்வு கட்டுரையாக எழுதி அந்த அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுதான் அந்த அறிவிப்பு. வாக்கியங்களால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிறப்புமிக்கதாக இந்த அறிவிப்பை நான் கருதுகிறேன். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும். முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கின்றன என்பதை ஆழமாக ஆராயும்போது தெரிந்து கொள்ளலாம்.

அந்த சிறப்புமிக்க போட்டியில் கலந்து, கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிட்டியதை நான் எனக்குக் கிடைத்த நற்பேறாகக் கருதுகிறேன். எனினும், முன்னோர் பின்னோரின் தலைவரான நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பற்றி முழுமையாக என்னால் கூறி முடிக்க இயலாது நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்து ஈடேற்றம் பெற விழையும் சாதாரண அடியான் நான். நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக வாழ்ந்து, அவர்களின்

சமுதாயத்தில் ஒருவனாக மரணித்து அவர்களின் பரிந்துரையால் அல்லாஹ் என் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதே அடியேனின் லட்சியம், 20 அடுத்து. கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை ராபிதா அறிவித்திருந்தது. அது தவிர நானும் இந்த ஆய்வுக்காக எனக்கென பல நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டேன்

அதாவது, சோர்வு ஏற்படுத்துமளவுக்கு நீளமாக இல்லாமலும், புரியமுடியாத வகையில் சுருக்கமாக இவ்வாமலும் நடுநிலையாக இருக்க வேண்டும். நிகழ்வுகள் குறித்து பல மாறுபட்ட செய்திகள் இருந்து அவற்றிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லையெனில், ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் என் பார்வையில் மிக ஏற்றமானதாக நான் கருதுவதை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிடுவேன். நான் தெரிவு செய்ததற்கான காரணங்களை பக்கங்கள் அதிகமாகி விடும் என்பதற்காக எழுதவில்லை.

மூத்த அறிஞர்கள் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டாலும் அல்லது மறுத்தாலும், அவர்களின் முடிவை அப்படியே நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் சரியானது; அழகானது பலவீனமானது என எப்படி மூடிவு செய்தாலும் அதையே நானும் ஏற்றுக் கொள்கிறேன். காரணம். இதுகுறித்து மேலாய்வு செய்வதற்கு போதுமான நேரம் என்னிடம் இல்லை.

நாள் கூறும் கருத்துகள் படிப்பவர்களுக்கு புதுமையாக இருக்கலாம் என நாள் அஞ்சும் இடங்களில் அல்லது பெரும்பாலோரின் கருத்து நான் கூறும் உண்மையான கருத்துக்கு மாற்றமாக இருக்குமிடங்களில் மட்டும் நான் தெரிவு செய்த கருத்துக்குரிய ஆதாரங்களை கட்டிக் காட்டியுள்ளேன். அல்லாஹ்தான் நல்வாய்ப்பு வழங்க போதுமானவன்,

அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நலவை முடிவு செய் நீதான் மன்னிப்பாளள், அன்பு செலுத்துபவன், அர்ஷின் அதிபதி, கண்ணியத்திற்குரியவன்!

ஸஃபிய்யுர் ரஹ்மான், முபாரக்பூர், இந்தியா

Book Review:

ArRaheeq Al-Makhtum (The Sealed Nectar) in Tamil. A complete authoritative book on the life of Prophet Muhammad H by Sheikh Safi-ur-Rahman al-Mubarkpuri,And tamil translate by Mufti Omer Shariff It was honored by the World Muslim League as first prize winner book. Whoever wants to know the whole life style of the Prophet in detail must read this book.

1 review for அர்ரஹீக் அல்மக்தூம் – நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

  1. Shahul hameed

    Alhamdulillah good book to understand the
    Prophet (pbuh) and quick response from sunnah shopping jazak allah khairan

Add a review

Your email address will not be published.

Shopping Cart