, , , ,

ஹதீஸ் பேழை

1050

உள்ளடக்கம்

15 ஹதீஸ் பிளாஷ் அட்டைகள்

15 ஹதீஸ் ஸ்டிக்கர்கள்

15 செயற்பாட்டுத் தாள்கள்

2 சிறிய செயற்பாட்டு பெட்டிகள்

1 ஹதீஸ் அட்டவணை

1 சாதனைச் சான்றிதழ்

நவீன நூற்றாண்டில் எம்மை விட்டுத் தூரமாகிக் கொண்டிருக்கும் பல நல்ல விடையங்களின் வரிசையில் நாம் கவலைப்பட வேண்டிய, நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் தான் நபி மொழிகள், வழிகாட்டல்கள்
தெரியாமல் போனதும் அதனால் நற்பண்புகள் எம்மை விட்டுத் தூரமாகிப் போனதும்..
நபிமொழிகள், வழிகாட்டல்கள்
மார்க்கக் கல்லூரிகளில் கற்பவர்களுக்குத் தான் தேவை என்று குறிப்பிட்ட சிலருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் தான். அதே போல சிறு வயதில் பெற்றோர், ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி மனனமிட வைத்த நபிமொழிகள் கூட பொடுபோக்கு, உலகமோகம் காரணமாக இன்று அது பலருக்கு மறந்து போய் விட்டது என்பது மற்றொரு கசப்பான உண்மையாகும்.
இன்னொரு பக்கம் சில பெற்றோர் இவற்றை தமது பிள்ளைகளுக்குப் புகட்டுவதற்கு எந்தக் கரிசனையும் எடுப்பதே இல்லை.
வேறு வேறு உலக விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவே இறைவனின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு ஏனையவர்களுக்கு
முன்மாதிரிகளாக இருக்க வேண்டிய நாம் இன்று ஏனையவர்களிடமிருந்து நற்பண்புகளைக் கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நபிமொழிகள் தெரிந்திருந்தால் நற்பண்புகள் தெரியாமல் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய சூழ்நிலைக்கு நாம் சென்றிருப்போமா??… சிந்திக்க வேண்டும்.
மார்க்க விடயங்களை தரம் குறைவாக பேசும் போது ஆவேசம் கொண்டு கொதித்தெழுகின்றோம். அப்படி பேசுபவர்களுக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் தெரியாது!! காரணம் என்ன??.. நபிமொழிகள், நற்பண்புகள், வழிகாட்டல்கள் தெரியாமல் போனது தானே காரணம்!!…சிந்திப்போம்.
தினமும் பல புத்தகங்களை சந்திக்கும் நான் சில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு நூலைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நூலாசிரியர் Nafla Salahudeen அவர்களின் படைப்பான “ஹதீஸ் பேழை ” என்று தமிழ் மொழியிலும் “Hadhees Nest ” என்று ஆங்கில மொழியிலும் வரையப்பட்டுள்ள இந்நூலானது சிறுவர்களை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலானது சிறுவர்களுக்கு மாத்திரமின்றி நபிமொழிகளை
மனனமிட வேண்டும் நற்பண்புகளைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள பெரியவர்களுக்கும் இலகுவாக தமது விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ள மிகவும்உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.
மிகவும் வித்தியாசமான முறையில் புத்தாக்க சிந்தனைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலானது நபி மொழிகளை மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்வதற்கு மிகவும் இலகுவான முறையில் புகைப்படங்களுடனும், மனதில்
 பதிந்ததை பரிசோதனை செய்து கொள்ள பயிற்சி அட்டவணைகளும் இணைக்கப்பட்டுள்ளதோடு, நற்பண்புகளை வளர்க்கக் கூடிய வகையில் ஊக்குவிக்கும் விதமாக சுவாரஷ்யமான பல விடயங்களை உள்ளடக்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நபி மொழிகள் எம்மை விட்டுத் தூரமாகிக் கொண்டிருக்கும் நிலையில் நபிமொழிகளைக் கற்பதற்கு ஊக்குவிக்கும் அழகிய முயற்சியாக நூலாசிரியர் இப்புத்தகத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த நூல் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நபிகளாரின் நற்குணங்களைத் கடைப்பிடித்து நற்பண்புகளுடன்
ஒளிமயமான குடும்பத்தைக் கட்டியெழுப்பி_வாழ விரும்பும் குடும்பங்களுக்கும், சிறந்த தலைமுறையை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உண்மையில் சிறுவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்குப் பாடமாக ஒரு விடயத்தை செய்வதிலும் அதனைப் பிரயோகித்தல் முறையில் செய்வதிலும் பலன்கள் வித்தியாசமாக இருக்கும்.
சிறுவர்கள் எப்போதும் நிறங்கள், இரசனையை விரும்பக்கூடியவர்கள்.
சிறுவர்களுக்குப் பல விடயங்களைக் கற்பித்துக் கொடுக்க உக்திகள் காணப்படுகின்றன. அதற்கேற்ப இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டு இருப்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஏற்படுத்திய வண்ணமே ஹதீஸ்களை இலகுவாக மனனம் செய்ய இலகுவாக இருக்கும்.

இது போன்ற வெளியீடுகள் இன்று மிகவும் அரிதாக வெளியிடப்படும் இந்த நூற்றாண்டில் சமூக அக்கறையின் காரணமாக நூலாசிரியர் இப்படியொரு நூலை வடிவமைத்து, வெளியிட்டிருப்பது உண்மையில் நன்றி கூறி வரவேற்று பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம் என்று தான் கூற வேண்டும்.

வாழ்த்துக்கள்

Author Nafla salahudeen.

இப்படியான புத்தாக்க சிந்தனையுடன் பல மார்க்க விடயங்கள் உள்ளடங்கிய உங்கள் அறிவியல் பயணம் இன்னும் தொடரட்டும்.உங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும். ஆமீன்.
இந்த நூலை விமர்சனக் கண்ணோட்டத்திற்காக எனக்கு அனுப்பி வைத்தமைக்கு நன்றி. உங்கள் பயணம் தொடர வாழ்த்தியவனாய் இந்த சிறிய விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.
بار ك الله فيها

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஹதீஸ் பேழை”

Your email address will not be published.

Shopping Cart