Sale!
, , , ,

இந்து சமயமும் இஸ்லாமும்

57

இந்தியப் பெருநாடு இனம், மொழி, சமயம் எனப் பல்வேறு வகைப்பட்ட வேறுபாடுகளுடன் அமைந்துள்ள நாடு, இந்த நாட்டு மக்களுக்குச் சமய நல்லிணக்க உணர்வு காலத்தின் கட்டாயத் தேவை. ஒவ்வொருவரும் அவரவர் சமய நெறியில் நின்று ஒழுகுவதில் தடை யில்லை. ஆனால் மற்றொரு சமயத்தினரை வெறுப்பது நாட்டு ஒற்றுமையைக் குலைப்பதாக அமையும். சமயங்களிடையே உள்ள ஒற்றுமையான கருத்துகளை அறிந்து மனிதநேயத்தோடு வாழ முயல்வது நாட்டு ஒற்றுமைக்கும். உலக நலனுக்கும் உகந்ததாகும். அந்த வகையில் இந்த நூல் இந்து, இஸ்லாம் மதங்களின் கருத்துக் களில் ஒற்றுமையான கருத்துக்களை எடுத்து இயம்புகிறது. இந்த நூல் சமய நல்லிணக்க உணர்வுக்குத் தூண்டு கோலாக அமையத்தக்கது. அருமையான ஆங்கில நூல் ஒன்றை காலத்தின் தேவை கருதி மொழிபெயர்த்து உதவியுள்ள திரு. ஹாஜாகளி அவர்களின் பணி நல்ல பணி. பயனுள்ள பணி. அவருக்கு நமது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்து சமயமும் இஸ்லாமும்”

Your email address will not be published.

Shopping Cart