Sale!
, ,

மண்ணறை வேதனைகளும் சுகங்களும்

62

இறந்தவர்களை அடக்கம் செய்கின்ற சமாதிகளை மண்ணறை என்று சொல்லப்படும். ஒரு மனிதர் இந்த உலகில் இறந்து மண்ணறைக்குச் சென்ற பின் அவர் இந்த உலகில் எப்படி வாழ்ந்தாரோ அதற்கேற்பவே அங்கு இருக்க முடியும். இங்கு நல்லவராக வாழ்ந்திருந்தால் அங்கு சுகமாக இருக்க முடியும். இங்கு கெட்டவராக இருந்திருந்தால் அங்கு வேதனைகளைத்தான் அனுபவிக்க முடியும்.

SKU: SS00833 Categories: , ,
Arabic Title الْقَبْرُ عَذَابُهُ وَنَعِيْمُهُ
Tamil Title மண்ணறை வேதனைகளும் சுகங்களும்
Title Mannarai Veathanaigalum Sugangalum
Author ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா
Translator M. அப்துர் ரஹ்மான் மன்பயீ M.A, M.Phil.
Edition 1st, 2022
Category Aeedah – Creed
Pages 88
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 

மண்ணறைதான் நமது இறுதிப் படுக்கை அறை. யார்தான் மறுப்போம்? ஆனால், மறப்போம். அந்தப் புதைகுழி எங்கோ யாருக்கோ தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மயானப் பகுதியின் வழியே கடந்துபோகும்போது வெட்டப்பட்ட ஒரு குழியை எட்டிப் பார்த்ததுண்டா? இறங்கிப் படுத்துப் பார்த்ததுண்டா? நம்மோடு கூடவே வந்து கொண்டிருக்கும் மரணத்துடன் தனிமையில் உண்மையாகவே படுத்திருக்கும் ஒரு ஸ்பரிசம் அப்போது பரவத் தொடங்கலாம். ஆனால், அந்தப் புதைகுழியினுள் மறைந்திருக்கும் உலகத்தை நமது பகுத்தறிவின் இருட்டில் கண்டுகொள்ள முடியாது. அதற்கு இறைச்செய்தியின் ஆதாரங்களில் வெளிப்படும் ஒளி நமது இதயங்களில் பாய வேண்டும். அப்போது தெரியும், நம் முன் விரியும் மண்ணறை உலகம் ஓர் ஆறடி அகலக் குழி அல்ல. அதையும் தாண்டி வேதனைகளும் சுகங்களும் ஒரு முன்னோட்டமாகச் சுற்றி வரும் மறுமையின் முதல்கட்ட உலகம் என்று. இதை ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா மரணச் சிந்தனையை வாழ்வியலாக்கும் கோணத்தில் இந்த நூலில் விவரிக்கிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மண்ணறை வேதனைகளும் சுகங்களும்”

Your email address will not be published.

Shopping Cart