Sale!
, , , ,

மூன்று அடிப்படைகள்

38

மூன்று அடிப்படைகள்
Book Name Moondru Adippadaigal
Author Muhammed Ibnu Aabdul Wahhab
Publisher Darul Huda
Catagory Aqeedah Book
Language Tamil
Edition 1st
Binding Paperback
Number of Pages – Pages
நூல் அறிமுகம்:

கல்வி கற்கின்ற மாணவர்கள், புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்புபவர்கள் என அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

இமாம் அவர்கள் ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ளவர்களாக இருந்ததால் மார்க்க அடிப்படைகளை மிகத் துல்லியமாக மூன்று அடிப்படைகள் இந்நூலில் விவரித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து அவர்களின் அனைத்து நூற்களையும் தமிழில் கொண்டு வருகிற முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். அல்லாஹ்தான் அதற்கு உதவவேண்டும். எங்கள் பணியை எளிதாக்கித் தர வேண்டும்.
கல்வி ஆழமற்ற ஆலிம்களின் தவறான பிரச்சாரத்தால் பலர் இமாம் அவர்களைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளார்கள். அத்தகையவர்களும் படிக்கும்போது தங்களின் இந்நூலைப் தவறான எண்ணத்தைத் திருத்திக்கொள்ள நிச்சயம் வாய்ப்புண்டு.
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)
இமாம் அவர்களின் பெயர், ஷைகுல் இஸ்லாம் முஹம்மது இப்னு முஹம்மது இப்னு அஹ்மது இப்னு ராஷிது இப்னு பரீது இப்னு முஹம்மது முஷ்ரிஃப் இப்னு உமர். இவர் தமிம் வமிசத்தைச் சேர்ந்தவர்.
இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு சுலைமான் இப்னு அலி
நஜ்து மாகாணத்தில் உயைனா எனும் ஊரில் ஹிஜ்ரீ 1115 ஆம் ஆண்டு பிறந்தார்.
பத்து வயதை அடைவதற்கு முன்பே குர்ஆனை மனனம் செய்து. பின்னர் மார்க்கக் கல்விகளைத் திறம்படக் கற்றார்.
ஹிஜ்ரீ 11:53 ஆம் ஆண்டிலிருந்து பகிரங்கமாக ஏகத்துவ அழைப்பை விடுத்தார். அனாசாரங்களையும் கப்ரு வழிபாடுகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.
இவரின் முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கினான், கப்ருகளை வணங்கிவந்த பலர், வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மைப்படுத்தினார்கள் அனாசாரங்களை விட்டு நபிவழிக்குத் திரும்பினார்கள்.
இமாம் அவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுமையாக மார்க்கப் பணிக்கே அர்ப்பணித்தார்கள். பல எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். இறுதியில் அவர்களின் உழைப்புக்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான். இன்று தூய இரு நகரங்களைத் தன்னில் கொண்ட ஏகத்துவ ஆட்சி நடை பெறுகின்ற சவூதி நாடு அவர்களின் அழைப்புப் பணிக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றியே ஆகும்.
இமாம் அவர்களின் பெயர், ஷைகுல் இஸ்லாம் அரும்பெரும் பல நூற்களை எழுதிய இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 1206 ஆம் ஆண்டு இறந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “மூன்று அடிப்படைகள்”

Your email address will not be published.

Shopping Cart