Sale!
, , , ,

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

76

Arabic Title تَحْذِيْرُ النُّبْلَاءِ عَنِ التَّشَبُّهِ بِالنِّسَاءِ
Tamil Title பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை
Title Peangalin Paavanaiyai Aangal Pinpatruvatha – Yeachcharikkai Urai
Author ஷெய்க் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரீ
Translator S. யூசுஃப் பைஜீ
Edition 1st, 2022
Category Akhalaq – Manners
Pages 88
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

ஒரு குழந்தை பிறந்தவுடன் அது ஆணா, பெண்ணா என்பதை அறிய ஆவல் கொள்கிறோம். தாய் தந்தை அதன் குறியறிந்து உறுதி செய்கின்றனர். நாம் ‘என்ன குழந்தை?’ என்று கேட்டு, அவர்கள் ஒரு பதிலைச் சொல்லும்போது, உடனே ‘என்ன பெயர்?’ என்று அடுத்த கேள்வி எழுப்புகிறோம். அப்போது ஆண் குழந்தைக்கு ஒரு பெண் பெயரைச் சொன்னாலோ, பெண்ணுக்கு ஆண் பெயரைச் சொன்னாலோ அது வினோதம் மட்டுமா? இல்லை, விகாரமும் கூட. என்ன காரணம்? ஆண் பெண்ணாகுவது அகோரம்; பெண் ஆணாகுவது அலங்கோலம்.

பெயரில் மட்டுமின்றி பாவனைகளிலும் ஆண் பெண் தனித்துவம் நமது அடையாளம். இதனைச் சிதைப்பவர்கள் முதலில் தங்களையே வதைக்கின்ற மனநோய்க்காரர்கள். பொண்ணொருத்தி தனக்குச் செயற்கை தாடி ஒன்றை வைத்துக்கொள்வதும், ஆணொருவன் தனக்கு மார்பகங்களை மாட்டிக்கொள்வதும் அவர்களின் பிறப்பையே திரிக்க நினைக்கின்ற இழிசெயல். சுயமரியாதையின் தற்கொலை.

இஸ்லாம் இந்த மனஇச்சைக்கும் உடல் இச்சைக்கும் தடைவிதிக்கின்ற சுயமரியாதைச் சமயம். ஒருவர் தனது உடலை தன் எதிர்ப்பாலினத்தின் உடைக்கோ, அலங்காரத்திற்கோ, உணர்வுக்கோ, தோரணைக்கோ ஒப்புக்கொடுப்பது அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டுவரக்கூடியது. அணிகின்ற செருப்பில் ஒன்று ஆணுடையதும் இன்னொன்று பெண்ணுடையதுமாக இருப்பதைவிட இரண்டுங்கெட்டான் நிலைதான் இது. இதில் அலட்சியம் காட்டுகின்றவர் அல்லாஹ்வின் படைப்பு நியதியின் எதிரியாவார். யெமன் தேசத்து அறிஞர் ஷெய்க் யஹ்யா அல்ஹஜூரீ இந்நூலில் இந்த மனக்கோளாறு குறித்த பல எச்சரிக்கைகளை நமக்கு வழங்குகிறார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை”

Your email address will not be published.

Shopping Cart