Sale!
, ,

ஸஹீஹான ஹதீஸ் அல்குர்ஆனுக்கு ஒருபோதும் முரண்படாது

57

Click here Download this Book PDF: Download

Book Name Saheehana Hadees Al-Quranukku Orupodum Muranpadadu
Author Hasan Ali Umari
Revised Dr.R.K. Noor Muhammed Madani
Publisher Ashaabul Hadeeth Publication
Language Tamil
Edition 2nd
Binding Soft
Number of Pages 116 Pages

நூல் அறிமுகம்:

  • நபி (ﷺ) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமாகவும், அவர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்துவதற்கு அடையாளமாகவும் நபி (ﷺ) அவர்கள் கூறிய பல முன்னறிவிப்புகள் அப்படியே நடந்து வருகிறது. அவ்வாறான முன்னறிவிப்புகளில் ஒன்றுதான் தங்களை நபி (ﷺ) அவர்களின் உம்மத்தவர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் தோன்றுவார்கள். அவர்கள் அல்குர்ஆனில் உள்ளதை மட்டுமே ஏற்பார்கள். அல்குர்ஆனுக்கு தெளிவுரையாக இருக்கின்ற ஹதீஸ்களை ஏற்காமல் விட்டு விடுவார்கள். அறிவிப்பாளர் தொடர் மற்றும் அறிவிக்கப்படும் செய்தியில் எந்த விதமான குறையுமில்லை என இந்த உம்மத்தவர்களால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அவர்கள் விமர்சனம் செய்வதை நீங்கள் காணலாம். அவர்கள், தங்களுடைய தவறான புரிதலினாலும், குறையான மதியினாலும் சில ஹதீஸ்களை அல்குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று தவறான ஆய்வின் அடிப்படையில் நிராகரிப்பார்கள். உண்மையில் ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ என நிரூபணமாகி விட்டால் அது ஒருபோதும் அல்குர்ஆனோடு முரண்படவே செய்யாது.
  • இவ்வாறு நேர்வழியை விட்டு வழிதவறியவர்களில் குறிப்பிடும் படியாக தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பின் தலைவரான பீ. ஜைனுல் ஆபிதீன் இருக்கிறார். இவர், ஸஹீஹான ஹதீஸ்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல ஹதீஸ்களை அல்குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி மறுத்து வருகிறார். அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஸஹாபாக்களை விமர்சனம் செய்கிறார். மேலும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளிற்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்றும் கூறுகிறார். இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் பதினான்கு நூற்றாண்டு காலமாக எவருமே சொல்லாத பல குழப்பமான கருத்துகளை இவர் கூறி வருகிறார்.இவரின் இந்த குழப்பத்திற்கு அடிப்படையான காரணமாக இருப்பது இவருக்கு மார்க்கத்தை பற்றிய சரியான ஞானம் இல்லாததும், அரபி மொழியை பற்றிய அறியாமையும் மற்றும் அவரும் அவரது ஜமாத்தினரும் ஸஹாபாக்களைவிட மார்க்கத்தை நன்றாக விளங்கி வைத்திருப்பதாக அவர் எண்ணுவதே ஆகும். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!)
  • அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்துகிறேன். அந்த அல்லாஹ்தான். பீ. ஜைனுல் ஆபிதின் மற்றும் அவரது அமைப்பின் அழைப்பாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்திற்கு தெளிவையும், தீர்வையும் அளிக்கும் விதமாக இந்நூலை எழுதுவதற்கு நமது சகோதரர் ஹசன் அலீ உமரீ. நதிரீ அவர்களுக்கு கிருபை செய்திருக்கிறான். இந்நூலிலுள்ள தகவல்களைக் கொண்டு அல்லாஹ் மக்களுக்கு சத்தியத்தை தெரியப்படுத்த வேண்டி பிரார்த்திக்கிறேன்!

    நூலாசிரியர் இந்நூலில், ஸஹீஹான ஹதீஸ்களை பற்றிய அவர்களின் விமர்சனத்திற்கு பதிலளித்தும், அவர்களின் வாதங்களுக்கு மறுப்பளித்தும், அவர்களின் ஆய்விலுள்ள குறைகளை தெளிவுப்படுத்தும் விதமாக பல தகவல்களை முயற்சி செய்து திரட்டியிருக்கிறார். நேர்வழியை அறிய விரும்புபவர்களுக்கு சத்திய பாதையை தெளிவாக்கியுள்ளார். மேலும் இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து என்ன என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார்.

    இந்நூலாசிரியர்:
    • இதற்கு முன்பு தமிழ் மொழியில் சில முக்கியமான நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். அல்லாஹ் மென்மேலும் நூலாசிரியருக்கு பயனளிக்க கூடிய நூல்களை எழுதுவதற்கு பல கிருபை செய்ய வேண்டி பிரார்த்திக்கிறேன்! அதன்மூலம் சத்தியத்தை நிலைநாட்டவும், அசத்தியத்தை அழிக்கவும் செய்வானாக! அல்லாஹ் நூலாசிரியரின் ஞானத்திலும், அமலிலும் பரக்கத் செய்வானாக! அவற்றை மறுமை நாளுக்கான சேமிப்பாக ஆக்கி வைப்பானாக! ஆமீன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸஹீஹான ஹதீஸ் அல்குர்ஆனுக்கு ஒருபோதும் முரண்படாது”

Your email address will not be published.

Shopping Cart