ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா வாழ்க்கை வரலாறு
Book Name | Shaikhul Islam Ibn Taymiyya Vaazhkkai Varalaaru |
Author | Abdul Hameed Aamir umaree |
Catagory | Life History Of Scholars |
Publisher | Darul Huda |
Language | Tamil |
Edition | 1st |
Binding | Paperback |
Number of Pages | 144 Pages |
நூல் அறிமுகம்:
அன்னாரின் தியாக வாழ்க்கையை அதிகம் பேர் தெரியாமல் இருக்கின்றனர் குறிப்பாக, தமிழ் பேசும் மக்களிடம் அவர்களைப் பற்றிய வரலாறு தரப்படவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவரவில்லை. அப்பெரும் குறையைப் போக்கும் விதமாக மூதறிஞர் மவ்லவி எஃப் அப்துல் ஹமீது ஆமிர் உமரீ அவர்கள், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பல நூல்களிலிருந்து ஆய்வு செய்து வரலாற்றுக் குறிப்புகளையும், அவரின் தியாக வாழ்க்கையையும், அவருடைய கொள்கைப் புரட்சியையும் எளிய தமிழில் தந்துள்ளார்கள்.
எல்லா முஸ்லிம்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது!
ஷைகு முஹம்மத் இக்பால் மதனீ:
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் தூய இஸ்லாமின் பரிசுத்தமான கொள்கைகளை இஸ்லாமிய சமூகத்தினருக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்து வைத்த போது அம்மக்கள் அவர்களுக்குக் கொடுத்தது சொல்லொண்ணாத் துன்பங்களும் சிறைவாசமுமே. இது வரலாற்று உண்மை.
இந்தச் சிரமங்களையெல்லாம் அல்லாஹ்விற்காக அவர்கள் ஏற்றுக்கொண்டு தூய எண்ணத்தோடு சத்திய இஸ்லாமிற்காக பாடுபட்டார்கள். அவர்களுடைய கொள்கைப் பிரசாரம். அவர்களுடைய தொகுப்புகள். அவர்கள் உருவாக்கித் தந்த நூல்கள் போன்ற அறிவுக்கருவூலங்கள் ஏழாவது நூற்றாண்டு முதல் இன்று வரை மட்டுமில்லை; உலகுள்ள வரை நிலைத்து நின்று. அறிஞர் பெருமக்கள் அவற்றை வைத்துப் பயன் பெற்று வருவதோடு அம்மாமேதையின் அறிவாற்றலை நினைவு கூர்ந்தும் வருகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் எழுதிய பல நூற்றுக்கணக்கான நூல்கள் இருப்பினும் அவர்களுடைய “மஜ்முவும் ஃபதாவா” குறிப்பிடத்தக்கது. ஓர் இஸ்லாமியருக்குத் தேவையான அனைத்து வகை
என்ற ஃபத்வாக்களின் தொகுப்பு அறிவுக்களஞ்சியத்தின் மொத்தத் தொகுப்புதான்
“மஜ்மூவுல் ஃபதாவா இப்னு தைமிய்யா”. எந்தத் தலைப்பில், யாருக்குத் தெளிவு வேண்டுமானாலும் மிக எளிதாகப் படித்து விளங்கிக்கொள்ளும் முறையில் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களுக்குப் பேரருள் புரிவானாக !
ஷைகுல் இஸ்லாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைப் பல நூல்களிலிருந்து திரட்டி தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கின்ற மரியாதைக்குரிய மூதறிஞர், என் மகனுடைய ஆசிரியர், மவ்லவி அப்துல் ஹமீது ஆமிர் உமரி அவர்களின் இச்சேவையைப் பாராட்டுகின்றேன். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்க வேண்டுமென்றும் இத்தொருப்பின் மூலம் சமுதாயத்தினர் பயன் பெற வேண்டும். என்றும் அவனிடமே துஆ செய்து நிறைவு செய்கிறேன்.
கமாலுத்தீன் மதனி:
எல்லா முஸ்லிம்களும் படிக்க படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக சமூகப் புரட்சியை விரும்புகின்ற மார்க்க அறிஞர்களும் இளைஞர்களும் இதைப் படிக்க வேண்டும். வல்ல அல்லாஹ் னஷருல் இஸ்லாம் அவர்களுக்கும், அவர்கள் போன்று தியாகம் செய்யும் நல்லோர்களுக்கும் நல்வருள் புரிவானாக!
Reviews
There are no reviews yet.