Sale!
, , ,

ஸில்ஸிலத்துல் அர்பயீன் – நாற்பது நபிமொழிகள் புத்தகங்களின் கொத்து

342

இஸ்லாமிய வாழ்வியலை விவரிக்கும் நாற்பது நாற்பது நபிமொழிகளின் தொகுப்புகள் அடங்கியது இந்நூல். கொள்கைகள், ஒழுக்கங்கள், குடும்ப வாழ்க்கை என்று பல்சுவை தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.

Arabic Title سِلْسِلَةُ الْأَرْبَعِيْنَ
Tamil Title ஸில்ஸிலத்துல் அர்பயீன் – நாற்பது நபிமொழிகள் புத்தகங்களின் கொத்து
Title Silsilathul Arbaeen
Author இமாம் நவவீ, இப்னு ரஜப், இப்னு ஹஜர் எனப் பலரின் நூல்கள் வரிசை
Translator அபூ அர்ஷத்
Edition 1st, 2022
Category Hadeeth
Pages 448
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 

இந்தப் புத்தகத்தின் தனித்துவம் இதனுள் பன்னிரண்டு சிறு நூல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாற்பது நபிமொழிகளின் தொகுப்பாக வெவ்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய உலகில் இமாம் நவவீ (ரஹ்) தொகுத்த நாற்பது நபிமொழிகள் நூல் (உண்மையில் அதில் 42 நபிமொழிகள் உள்ளன) மிகவும் அறியப்பட்ட ஒன்று. ஏனெனில், அது அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைகளை, ஒழுக்கங்களைத் தேர்வுசெய்து வழங்கியது. அறிஞர்கள் பலர் அதற்கு விளக்கவுரை எழுதவும், கற்பிக்கவும் செய்துவருகின்றனர். இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலீ (ரஹ்) கூடுதலாக எட்டு நபிமொழிகளைச் சேர்த்து ஐம்பதாக ஆக்கி விளக்கவுரை எழுதினார்கள். இப்படி நாற்பது நபிமொழிகள் எனும் அம்சம் நமது சமூகத்தில் அறிஞர்கள் மற்றும் சாமானியர்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவை இலகுவாகக் கற்பிக்கத் தொடர்ந்து அணுகப்பட்டு வந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டு பல்வேறு தலைப்புகளில் மிக அவசியம் அறிய வேண்டிய நபிமொழிகளை இந்நூலின் ஆசிரியர்கள் வழங்கியுள்ளார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸில்ஸிலத்துல் அர்பயீன் – நாற்பது நபிமொழிகள் புத்தகங்களின் கொத்து”

Your email address will not be published.

Shopping Cart