Book Name | Tamizhagathil Thawheed Ezhuchchi |
Author | Group Of Scholars |
Publisher | Islamic Studies Publication House (ISPC) |
Catagory | History Book |
Language | Tamil |
Edition | 2nd |
Binding | Paperback |
Number of Pages | 72 Pages |
நூல் அறிமுகம்:
தமிழகத்தில் முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் தூயவடிவைத் தெரிய வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது? தவ்ஹீத் பற்றிய சரியான விளக்கத்தை எப்போது தெரிய ஆரம்பித்தார்கள்? குர்ஆன் சுன்னாவின் மூலம் மட்டுமே இஸ்லாத்தை சரியாகப்புரிந்து கொள்ளமுடியும் என்று பிரச்சாரம் துவங்கப்பட்ட காலத்தில் அதற்காக எவ்வளவு பெரிய தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டன? யார் யார் எல்வளவு சிரமங்களை அனுபவித்தார்கள்? என்ற உண்மைகள் நிறைய சகோதரர்களுக்கு தெரியாமலே இருக்கின்றன. குறிப்பாக இளைய தலை முறையினருக்கு அந்த வரலாற்று உண்மைகள் சரியான முறையில் தெரியவில்லை. அதைத் தெரியவிடாமல் சிலர் தடையாக இருக்கின்றனர்.
ஒன்றிரண்டு நபர்களால் மட்டுமே தவ்ஹீத் தமிழகத்தில் வளர்ந்தது என்று தவறாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டது. இந்த வரலாற்று ஆய்வை தொகுக்கின்ற பணியில் தமிழகத்தின் தவ்ஹீது அறிஞர்களான கமாலுத்தீன் மதனி, முஹம்மது இக்பால் மதனி, அப்துல் காதிர் மதனி, ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, அப்துல் ஜலீல் மதனி, முஹம்மது யூசுஃப் மிஸ்பாஹி, பக்ரூத்தீன் ஆகிய அறிஞர்கள் பங்குபெற்றனர். வேறு சில அறிஞர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சார பாதையில் நடைபெற்ற வரலாற்று சம்பவங்கள் இப்புத்தகத்தில் அப்படியே தரப்பட்டுள்ளன. இந்த வரலாற்று புத்தகத்தை 2006ல் வெளியிட்டோம். இந்த புத்தகம் தற்போது இரண்டாவது பதிப்பாக வெளியிடப்படுகிறது. வாசகர்கள் இதைப்படித்துப் பார்த்து விடுபட்ட விஷயங்களைச் சுட்டிக் காட்டுவதுடன் அவர்களுடைய மேலான ஆலோசனைகளையும் வழங்குவார்களாளால் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் திருத் தத்துடன் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இஸ்லாமிய கல்வி வௌயீட்டு நிறுவனம்,
10.12.2011
Reviews
There are no reviews yet.