Sale!
, , ,

அஹ்லுஸ் ஸுன்னா கொள்கை தூய திரு கலிமா

43

இந்த சிறிய தொகுப்பு அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கைகளையும் பண்புகளையும் தவ்ஹீதின் சிறப்புகளையும் மிக அழகாக, சுருக்கமாக இந்த தொகுப்பில் அவர்கள் நமக்கு வழங்கி இருக்கிறார்கள். கல்வி கற்கின்ற தொடக்க நிலை மாணவர்கள் இதைப் படிப்பது நிச்சயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். – Darul Huda

அஹ்லுஸ் ஸுன்னா தூய திரு கலிமா

Book Name Ahlusunnah Udaiya Kolgaigal & Thooya Thiru Kalimaa
Author Imam Abdur Rahman As-Sa’di (Rah)
Translator Mufti Umar Shareef Qasimi
Publisher Darul Huda
Language Tamil
Edition 1
Binding Soft
Number of Pages 64 Pages
நூல் அறிமுகம்:

 

இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு நாசிர் அஸ்ஸஅதி அவர்கள் தொகுத்ததுதான் இந்த சிறிய தொகுப்பு. அஹ்லுஸ் ஸுன்னா -வின் கொள்கைகளையும் பண்புகளையும் தவ்ஹீதின் சிறப்புகளையும் மிக அழகாக, சுருக்கமாக இந்த தொகுப்பில் அவர்கள் நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களின் ‘கிதாபுத் தவ்ஹீத்’ நூலுக்கு ஷைக் ஸஅதி அவர்கள் “அல் கவ்லுஸ் ஸதீத்‘ என்ற பெயரில் ஒரு விரிவுரை நூல் எழுதியுள்ளார்கள். அந்த நூலின் முன்னுரையில் இந்த தொகுப்பை இணைத்துள்ளார்கள், அதிலிருந்து இந்த தொகுப்பு எடுக்கப்பட்டு, நன்மையை நாடி சிறு நூலாக வெளியிடப்படுகின்றது. அல்லாஹ் இந்த வெளியீட்டை பொருந்திக் கொள்வானாக! அமீன்

கல்வி கற்கின்ற தொடக்க நிலை மாணவர்கள் இதைப் படிப்பது நிச்சயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.அஹ்லுஸ் ஸுன்னா கொள்கை கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு இந்த சிறிய கையேட்டை விளக்கமாக போதித்தால் இன் ஷா அல்லாஹ் கண்டிப்பாக அது அவர்களுக்கு கொள்கை விஷயத்தில் நல்ல தெளிவையும் உறுதியையும் கொடுக்கும்.

இந்நூலின் முதல் பகுதியில் :

உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாவின் நேரான கொள்கைகள். மிக மிக முக்கியமான கொள்கைகளை இமாம் அவர்கள் தொகுத்துள்ளார்கள். கண்டிப்பாக படியுங்கள்!

உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாவாக வாழ்வோம்! அந்த கொள்கையை கற்று அதனை மக்களுக்கு மத்தியில் பரப்புவோம்!!

இரண்டாம் பகுதியில் :

லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்ﷺஉடைய சிறப்பு | பொருள் | விளக்கம் | ருக்னுகள் | நிபந்தனைகள் | அதை முறிப்பவைகள். இதுவும் மார்க்க அறிஞர்கள் எழுதியதிலிருந்து தொகுக்கப்பட்டதாகும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

அல்லாஹ்வின் அடியார்களே!

கல்வியை தேடும் மாணவர்களே,உங்கள் பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவுகளுக்கு இந்நூலை கற்றுக் கொடுங்கள்!! உங்கள் நன்பர்களுடன் இதை படித்து பரிமாறிக் கொள்ளுங்கள்!!

எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்(سبحانه وتعالى) பயனுள்ள கல்வியை கொடுப்பானாக! நேரான கொள்கையில் எண்ணையும் உங்களையும் உறுதிப்படுத்தி வைப்பானாக!! ஆமீன்!

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “அஹ்லுஸ் ஸுன்னா கொள்கை தூய திரு கலிமா”

Your email address will not be published.

Shopping Cart