Sale!
, ,

வரலாற்றை புரட்டிப்போட்ட 100 இஸ்லாமிய ஆளுமைகள்

171

Tamil Title வரலாற்றை புரட்டிப்போட்ட 100 இஸ்லாமிய ஆளுமைகள்
Title Varalatrai Purattipotta 100 Aalumaigal
Author Usthad. S. Mohamed Ismail Nadwi M.A
Subject History
Edition 1st Edition (Mar 2022)
Pages 112
Size 14 × 21.5cm
Language Tamil
Binding Soft
Publisher Hala Publications
Weight

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

2015 ஆம் ஆண்டு அடியேன் சவுதி அரேபியாவில் ரியாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Jarir book store -சர்வதேச நிறுவனத்தில் மனிதநல மேம்பாட்டு துறையில் அலுவலராக பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, எங்களது ஷோரூமில் இருக்கும் அரபு புத்தகங்களின் புதிய வரவுகளை பார்வையிடுவது உண்டு.

அப்பொழுது பல மில்லியன் மக்கள் படித்து மிகப்பிரபலமான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம் கண்ணில் பட்டது, அது Top seller books அதிகம் விற்பனை செய்யப்படும் வரிசையில் முதலாவதாக வைக்கப்பட்டிருந்தது.

சற்று இந்த புத்தகத்தை புரட்டி விட்டு, அது தொடர்பாக வலைதளங்களில் என்ன செய்தி இருக்கிறது என்று பார்த்த பொழுது, இந்த புத்தகத்தை எழுதிய பாலஸ்தீன கவிஞரும் எழுத்தாளருமான சகோதரர் ஜிஹாத் அத்துர்பானி அவர்கள் யூடியூப் சேனலில் இந்த புத்தகம் பற்றிய விமர்சனங்களை ஆவணப் படங்களாக வெளியிட்டு இருந்தது கண்ணில் பட்டது….!!!

இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இஸ்லாமிய ஆளுமைகளை அவர் வரிசைப்படுத்தி பதிவு செய்திருந்தார். ஒவ்வொரு வீடியோக்களும் பல மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது, எனது கவனத்தை அதிகம் ஈர்த்தது.

உடனே, அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். என்னில் பல ஈமானிய உள்ளுணர்வுகளையும் சிந்தனை தாக்கங்களையும் அது ஏற்படுத்தியது .இஸ்லாமிய ஆளுமைகள் என்று சொன்னால் இறைத் தூதுவர்கள், சஹாபாக்கள், இமாம்கள் என்று மட்டுமே நமது கண்களின் முன் தோன்றும் நினைவலைகள், இன்றைய நிகழ் காலத்தில் அவர்களின் பாதையில் பயணித்த அவர்களின் பண்பு நலன்களை கொண்ட சமகால இஸ்லாமிய ஆளுமைகள்
இருக்கவா போகிறார்கள் என்ற எண்ணம் நமக்கு வரலாம் !!!

இந்த புத்தகம் “ஆம்” என்று பதில் கூறுவதுடன், இஸ்லாமிய விழிப்புணர்வை, புரட்சிகரமான சிந்தனைகளை நமது உள்ளத்தில் ஆழமாக விதைக்கும். அடிப்படையில் நமது சமகாலத்தில் வாழ்ந்த, வரலாற்றில் இருட்டடிப்புகள் செய்யப்பட்ட பல இஸ்லாமிய ஆளுமைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இதையே, நாம் தமிழ் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏன் மொழிபெயர்க்க கூடாது என்ற கேள்வி, கடந்த சில வருடங்களாக என் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த தொடர்களை எனது யூடியூப் சேனலிலும்

https://youtube.com/channel/UCVEJD9xWmF2bIfub_vM69Eg

தமிழ் மொழியில் சில வரலாற்று ஆவணப்படங்களையும் மொழிபெயர்த்து இருக்கிறேன். சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது உரைகளும் நிகழ்த்தி இருக்கிறேன்.

இந்த புத்தகத்தை பற்றிய ஒரு அறிமுகத்தையும் வலைத்தளங்களில் பதிவு செய்த பொழுது, வலைத்தள நண்பர்களும், எனது நல விரும்பிகளும், இந்த புத்தகத்தை தமிழ் மொழியில் கொண்டு வாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதால், அடியேன் இந்த பணியை தொடங்கினேன். உடனடியாக இந்த புத்தகத்தில் இருந்த புத்தக ஆசிரியரின் தொடர்பு எண்ணை அறிந்து அவருடன் பேசினேன்.

சகோதரர் ஜிஹாத் அத்துர்பானி
எந்த தயக்கமும் இல்லாமல் என்னுடன் நல்ல முறையில் உரையாடி மிகவும் ஊக்குவித்தார். இந்த புத்தகம், அன்று ( 2015) ரஷிய, ஸ்பானிய, பிரஞ்சு மொழியில்தான் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. இதுவரை இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை என்று என்னிடம் அவர் கூறி, அடியேன் தமிழ் மொழியில் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று அவர் ஆர்வப் படுத்தினார்.

முதன் முதலில் எனது மொழியாக்கத்தின் பதிவுகள் மதுரை நாஃபியுல் உலூம் அரபுக் கல்லூரியில் இருந்து வெளியாகும் “மறைச் சுடர் “, என்ற மாதப் பத்திரிகையின் பொறுப்பாளரான மௌலானா முஸ்தஃபா காஸிமி அவர்கள் அன்பினால் தொடர்களாக வந்து கொண்டிருந்தது. வேலை பளுவின் காரணத்தினால் அடியேனுக்கு தொடர்ந்து எழுத முடியாமல், இடையில் தொடர்கள் நின்றுவிட்டன.

2021 ஆம் ஆண்டு சென்னை மதரசா காஷிஃபுல் ஹுதா சார்பாக வெளிவரும் மாத இதழான
“மனாருல் ஹுதா “,என்ற பத்திரிகையில் எனது மொழியாக்க பதிவுகள் இதுவரை 14 தொடர்களாக வந்திருக்கிறது. எனது நண்பரும், சமூக ஆர்வலருமான திருச்சி அப்துல் பாரி அவர்கள் இதை முதல் பாகமாக வெளியிடலாமே என்று சொன்னதை வைத்து இன்று இறையருளால், முதல் பாகத்தை வெளியிடுகின்றோம்.

பாபநாசம் தாருல் இக்லாஸ் அஸ்ஸித்தீகிய்யா மதரஸாவின் முதல்வரான சங்கைமிகு உஸ்தாத் ஷைக் அப்துல் காதிர் காஷிஃபி ,காஸிமி ஹஃபிழஹுல்லாஹ் அவர்களின் வழிகாட்டுதலில் இன்று நம் முன், ஒரு புத்தகமாக காட்சியளிக்கிறது.

எங்களது தாருல் இக்லாஸ் அஸ்ஸித்தீகிய்யா மதரஸா அரபுக்கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படுவதை முன்னிட்டு, சகோதரர் ஜிஹாத் அத்துர்பானி அவர்களை தொடர்பு கொண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு கொடுத்த பொழுது, தான் ஸ்விட்சர்லாந்தில் வசிப்பதாகவும், உடனடியாக வரமுடியாத சூழலில் இருப்பதாகவும் சொல்லி எனக்கு மிகவும் ஆர்வ படுத்தி புத்தகத்தை வெளியிட சொன்னார்.

வெகுவிரைவில் முழு புத்தகத்தையும் வெளியிடும் பொழுது தன்னை அழைத்து அவர் கரங்களால் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டது என்னை நெகிழ்வடையச் செய்தது.

இந்த புத்தகம் வெளியாவதற்க்கு மிகவும் துணையாக இருந்த சித்தையன் கோட்டையைச் சேர்ந்த
அல்லாமா அப்துல்லா பாக்கவி அவர்களின் மகனாரான டாக்டர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கும், இந்த புத்தகத்தை கோர்வை செய்து முறைப்படுத்தி தட்டச்சில் கொண்டுவந்த மௌலவி அப்துல் பாரி சதகி அவர்களுக்கும்,

இந்த புத்தகம் வெளிவருவதற்கு மிகவும் துணையாக இருந்த சவூதி அரேபியாவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் சகோதரர்களான காயல் ஹாஃபிழ் ஷேக் தாவூத், திருச்சி ஜ. ஜாஹிர் உசேன், மன்சூர், ஷவுக்கத் அலி,முஸ்ஸம்மில், இன்னும் யாரெல்லாம் துணை புரிந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும் என்று துஆ செய்து கொள்கிறேன்.

பாலஸ்தீன கவிஞரும் வரலாற்று ஆய்வாளருமான ஜிஹாத் அத்துர்பானி அவர்கள் இன்றைய காலத்து இஸ்லாமிய வாலிபர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.

சிரியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடக்குமுறைகளும் மனித இனத்திற்கு எதிராக நடத்தப்படும் இன சுத்திகரிப்புக்கு காரணமாக இருக்கிற அதன் அதிபர் பஷார் அல் அசதுக்கு எதிராக தன்னுடைய புரட்சிகரமான அரபு கவிதைகளை எழுதி தனது எதிர்ப்பை அறிவித்தவர்.

எகிப்தின் ஆட்சியாளர் ஹுஸ்னி முபாரக் அவர்களுக்கு எதிராக தனது வீரம் செறிந்த புரட்சிக் கருத்துகளை, தன்னுடைய கவிதையின் மூலம் வெளிப்படுத்தி, இஸ்லாமிய சமூகத்திற்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.

“நாங்கள் வீரர்கள் எங்கள் தலையை எதிரிகளுக்காக தாழ்த்திக் கொள்ள மாட்டோம் (إننا الأبطال لا نحني الرؤوس)”
போன்ற வீரம் செறிந்த பல இஸ்லாமிய புரட்சிகரமான கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றை
ஃபழ்லு ஷாகிர்,நாயிஃப் ஷர்ஹான் போன்ற பாடகர்கள் பாடல்களாக பாடியுள்ளனர். அவை யூடியூபில் வைரலாகி கொண்டிருக்கிறது.

வயதில் மிகவும் சிறியவராக இருந்தாலும், இவருடைய எழுத்துக்களால் இன்று இஸ்லாமிய உலகம் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வை பெற்றுக்கொண்டு வருகிறது.

இவருடைய முதல் புத்தகம்

“வரலாற்றின் ஓட்டத்தை புரட்டிப் போட்ட 100 இஸ்லாமிய ஆளுமைகள்”

“مائة من عظماء أمة الإسلام غيروا مجرى التاريخ”

ஈமானிய உணர்வை தூண்டக் கூடியதாகவும், வரலாற்றில் மறைக்கப்பட்ட இருட்டடிப்பு செய்யப்பட்ட பல உண்மைகளை நேராக சென்றும், பல ஆய்வுகளின் அடிப்படையிலும் அவர் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தில் அவர் எழுதி இருக்கும் சம்பவகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒரு சில அரபு ஆய்வாளர்களின் ஊடாகவும் விமர்சனம் செய்யப்பட்டிருப்பது கூடுதலாக இந்த புத்தகத்தை படிப்பதற்கு என்னை தள்ளியது என்றே சொல்லலாம்.

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தர்பியாவில் கட்டமைக்கப்பட்ட சஹாபாக்களின் உயர்ந்த பண்பு நலன்கள், அவர்கள் அடக்கப்பட்டிருக்கிற மண்ணறைகளில் தங்கி விடவில்லை, அவர்கள் புதைக்கப்படவில்லை….. விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த உயர்ந்த பண்பு நலன்கள் அவர்களுக்கு பின்னர் இன்றைய காலம் வரை தொடர்ந்து சிங்க நடை போட்டு கொண்டிருக்கிறது. அந்த வீரமிக்க மிடுக்கான நடைக்கு சொந்தக்காரர்களான நமது இஸ்லாமிய ஹீரோக்களை வரலாற்றின் வெளிச்சத்தில் நமக்கு அடையாளப்படுத்துகிறார் நமது ஜிஹாத் அத்துர்பானி.

உஸ்மானிய பேரரசர்களான
ஸுலைமான் அல்காணூனி,ஸலீமுல் அவ்வல், அர்தகொருல், பர்பூஸா சகோதரர்கள், ஏன் நமது காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த குவைத் நாட்டைச்சேர்ந்த டாக்டர் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுமைத் வரை பட்டியல் இந்த புத்தகத்தில் நீண்டு கொண்டே இருக்கிறது.

இறுதியான ஒரு விடயம், நம்மை பிரமிக்கச் செய்கிறது 100 இஸ்லாமிய ஆளுமைகள் என்று தலைப்பிட்ட பின்பு ,99 ஆளுமைகளை மட்டும் குறிப்பிடுகிறார், இந்த புத்தகத்தை வாசிக்க கூடிய நீங்கள்தான் அந்த 100வது ஆளுமை என்று நம்மை இஸ்லாமிய விழிப்புணர்வுக்குள் தள்ளிவிடுகிறார்.

600 பக்கங்களுக்கும் அதிகமான அரபு மூல புத்தகம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் பொழுது 1000க்கும் அதிகமான பக்கங்களாக மாறலாம்.

இந்த நிலையில், கடந்த 2018 ம் ஆண்டிலிருந்து 2022 இந்த வருடம் வரை, ஒவ்வொரு வருடமும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு புத்தகத்தை துர்பானி எழுதி வெளியிட்டு வருகிறார். அரபு இஸ்லாமிய உலகத்தில் இந்த புத்தகங்கள் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

100 இஸ்லாமிய ஆளுமைகள் என்ற இந்த புத்தகத்தை ஆவணப்படமாக, இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்,

https://youtu.be/-5W6cWglcSg

இதுவரை 6 மில்லியன்களுக்கு அதிகமான
பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

இவருடைய புத்தகத்தை பற்றி இஸ்லாமிய அறிஞர்களான அஷ்ஷேக் ஆயிழ் அல்கர்னி, அஷ்ஷேக் ஸல்மான் அல்அவ்தா, வரலாற்று ஆசிரியரான பிரபலமான டாக்டர் அலி ஸல்லாபி
போன்ற அறிஞர்களுக்கு மத்தியில் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து, அவர்களுடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார் அதைக் கீழ்காணும் யூடியூப் லிங்கில் பார்க்கலாம்.

https://youtu.be/qzoY8wStQmQ

இவர் எழுதிய மிகப்பிரபலமான வரலாற்று சிறப்புமிக்க ஏழு புத்தகங்கள் பின்வருமாறு , அல்லாஹ் நாடினால் இந்த புத்தங்கள் அனைத்தையும் தமிழ் இஸ்லாமிய சமூகத்திற்கு மொழிபெயர்ப்பதற்கு வாய்ப்பினை இந்த அடியேனுக்கு வழங்குவானாக.

١-مائة من عظماء أمة الإسلام غيروا مجرى التاريخ
٢-101 لغز بربروسا
٣-101 لغز آريوس
٤-101 حرب الفاندال
٥-101 المعركة الأخيرة
٦-مدرسة محمد صلى الله عليه وسلم
٧-مدرسة الصحابة رضي الله عنهم.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய புத்தகத்தையும் துர்பானிஅவர்கள் தனது யூடியூப் சேனலில் வழங்கியிருக்கிறார்

العملية ١٠١
101 -Operation

மேலும் பல அரிய வரலாற்று சிறப்புமிக்க புத்தகங்களை துர்பானி அவர்கள் அதிகமதிகம் எழுதுவதற்கு அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!!!

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!!

இன்ஷா அல்லாஹ் இந்த புத்தகத்தின் முதல் பாகம் உங்களுடைய கரங்களுக்கு முன்பாக இருக்கிறது, முதல் 10 ஆளுமைகளை மட்டும் இந்த பாகத்தில் நாம் வெளியிட்டிருக்கிறோம், மீதம் உண்டான ஆளுமைகள் அடுத்தடுத்த பாகங்களில் மிக விரைவாக வருவதற்கு துஆ செய்யுங்கள் !!

இந்த புத்தகத்தில் காணும் குறை நிறைகளை தாராளமாக அடியேனுக்கு இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கும் எனது வாட்ஸ்அப் நம்பரின் ஊடாக தொடர்பு கொள்ளவும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரலாற்றை புரட்டிப்போட்ட 100 இஸ்லாமிய ஆளுமைகள்”

Your email address will not be published.

Shopping Cart